FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, June 22, 2012

TVR மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம்

Friday, June 22, 2012
9:59 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-06-2012 அன்று திருவாரூர்
மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.



கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.
இதை கண்டித்து இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.இதில் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனது குறிப்பிதக்கது.
அடியக்கம்கலத்தில் இப்போரட்டத்திற்க்கு செல்வதற்க்காக வாகன ஏற்ப்பாடு செய்ப்பட்டிருந்தது. 

மேலும் அடியக்கமங்கலத்தில் 10 மாணவர்கள் தங்களது பள்ளி சீருடையுடன் இப்போரட்டத்தில் கலந்துக்கொண்டு கோஷங்களை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TVR மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top