FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, November 8, 2012

நபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(?), தகர்தெறிந்த TNTJ AYM...

Thursday, November 8, 2012
11:40 PM

(மணமகன் கமருதீன் அவர்கள் TNTJ AYM திருமண பதிவேட்டில் கையெழுத்திடும் போது)


திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் TO நாகை சாலையில்  அமைந்துள்ள ஊரான  அடியக்க்கமங்கலத்தில் முஸ்லிமகள் பெரும்பாண்மையாக  வசிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை தொடர்பாக பிரச்சனையில்  தவ்ஹீத் ஜமாத்தினர் தனியாக பிரிந்து மர்க்கஸ் அமைத்து சிறப்பாக செயல்படுகின்றனர். 

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் இவர்களின் திறன்பட்ட செயல்பாட்டால்  மக்கள் ஈர்க்கப்படுவதை பொறுக்க முடியாத ஏகத்துவ எதிரிகள் தொடர்ந்து நமது TNTJ சகோதரர்களுக்கு தொந்தரவு கொடுத்துவந்தனர். 



கடந்த ரமலானில் ஏழைகளுக்காக கொடுக்கப்படும் பித்ராவை கூட யாரும் வசூலிக்க கூடாது, பொதுமக்கள் அனைவரும் சுன்னத் ஜமாஅதினரிடம்(?) மட்டும் தான் பித்ராவை கொடுக்கவேண்டும் என்றும் எந்த அமைப்பினரும் அடியக்கமங்கலத்தில் பித்ரா விநியோகம் செய்யகூடாது என்று சர்வாதிகார தோரணையில்  மிரட்டல் விடுத்தனர். இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத நமது சகோதரர்கள் வழக்கம் போல் பித்ரா தொகைய வசூல் செய்தனர். 

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த ஆண்டைவிட அதிகமாகவே வசூல் ஆனது.அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய போலி சுன்னத் ஜமாத்தினர் தடுக்க முயன்றதால், R.D.O உதவியுடன் பித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட.




( மஹர் கொடுக்கும் போது)

இந்நிலையில் தான் அடியக்கமங்கலம் சுன்னத் ஜமாத்தினர்(?) நபிவழி திருமணத்திற்கு தடை விதித்தனர். அடியக்கமங்கலத்தில் இது நாள் வரை நபிவழி திருமணம் நடைபெற்றதில்லை. அப்படி யாரும் திருமணம் செய்ய விரும்பினால் உள்ளுரில் நிலவிய எதிர்ப்பின் காரணமாக வெளியூரில் தான் செய்யும் நிலை இருந்தது. 

இந்நிலையில் அடியக்கமங்கலம் TNTJ கிளையின் முன்னாள் துணை தலைவர்  அமானுல்லாஹ் அவர்களின் தங்கையும், நஜீர் அஹ்மது அவர்களின் மகளும் ஆன N.ஜுலைஹா  என்ற பெண்ணுக்கும் (இவர் அடியக்கமங்கலத்தில்  பெண்கள் பயான் உள்ளிட்ட மார்க்க பிரச்சாரம் செய்யும் பெண் அழைப்பாளர் ஆவார்), நாகை மாவட்டம் கீழ்வேளூர் சந்தைதோப்புவை சார்ந்த  அப்துல் முத்தலிப் அவர்கள் மகன் M.கமர்தீன் அவர்களுக்கும் 5-11-2012 திங்கள்கிழமை அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மஸ்ஜீதுல் அக்ஸா (மர்க்கஸில்) நபிவழி திருமணம் செய்வதாக முடிவு செய்து மேற்படி குடும்பத்தினர் நமது ஜமாத்திற்கு தெரிவித்தனர். 

உடனே நமது கிளை நிர்வாகிகள் திருமணத்திருக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனை அறிந்த போலி சுன்னத் ஜமாத்தினர் மூட நம்பிக்கையின் கேந்திரமாக திகழும் நமது நிர்வாக எல்லைக்குள் நபிவழி திருமணம் நடப்பதா ? இத்திருமணம் நடந்தால் தமது கேடுகெட்ட கலாசாரம் அழிந்து விடுமே என்று பயந்து வெளிநாட்டில் உள்ள பெண்ணின் தகப்பனாருக்கு போன் செய்து இந்த  திருமணம் TNTJ மர்க்கஸில் நடைப்பெற்றால் பெண்ணையும், மாப்பிள்ளையையும் மர்க்கஸோடு  வைத்து கொழுத்திவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அத்துடன் பெண்ணின் தாயாருக்கும் இதே மிரட்டலை விடுத்துள்ளனர்.



( திருமணத்திற்க்கு கலந்துக்கொண்ட ஏகத்துவ சொந்தங்களின் ஒரு பகுதி)


 மேலும் 4-11-2012 ஞாயறு  காலை ஊர் மகாஜன சபை கூட்டத்தை கூட்டி எப்படியாவது இந்த திருமணத்தை தடுக்கவேண்டும் என்று ஆலோசித்துள்ளனர். இக்கூட்டதிருக்கு ஆட்டோ மூலம் ஊரில் உள்ள தெருக்களில் விளம்பரம் செய்து "நபி வழி திருமணத்திற்கு எதிராக முடிவு எடுக்க வேண்டும், எனவே ஊர் கூட்டத்திற்கு கார்டு உள்ளவர்களும் கார்டு இல்லாதவர்களும் கலந்து கொள்ள வேண்டும்" என்று அறிவிப்பு செய்து உள்ளனர். 

(தெருவுக்கு 2பிரதிநிதிகளை தேர்வு செய்து கார்டு வழங்குவார்கள். அக்கார்டு உள்ளவர்கள் மட்டுமே ஊர் கூட்டத்தில் பேச முடியும் என்பது அவ்வூர் வழக்கம், வழக்கத்திற்கு மாறாக நபிவழி திருமணத்தை எதிர்ப்பதற்காக கார்டு உள்ளவர்கள் மட்டுமின்றி கார்டு இல்லாதவர்களையும் கூட்டத்திற்கு அழைத்துள்ளனர்) 

உடனே பெண்வீட்டார் நமது ஜமாஅத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட நிர்வகத்தின் அறிவுறுத்தல் படி காவல் துறைக்கு கிளை மூலம் புகார் செய்யப்பட்டு திருமணத்திற்கு பாதுகாப்பு கோரப்பட்டது. 

இதை தொடர்ந்து 4-11-2012 மாலை 4 மணிக்கு தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு எட்டபடாத நிலையில் மீண்டும் இரவு 8 மணிக்கு RDO முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் தமது விருப்பபடி திருமணம் செய்ய உரிமை உள்ளது என்பதால் யாரும் தடுக்ககூடாது என  RDO கூறிவிட்டு , இத்திருமணத்திற்கு பாதுகாப்பு அளிக்குக்மாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

 இதனால் கோபம் அடைந்த போலி சுன்னத் ஜமாஅதினரும் ,  TNTJ எதிரிகளும் அவர்களுடைய பள்ளிவாசலில் பல முறை சங்கு ஊதி  அவசரகூட்டம் போட்டனர் . இக்கூட்டத்தில் திருமணத்தன்று TNTJ பள்ளியை முற்றுகை இட்டு திருமணத்தை தடுக்கவேண்டும் என்று முடிவு செய்ததோடு, ஊர்க்காரர்கள் யாரும் வேலைக்காகவோ, வேறு விசயமாகவோ வெளியூர் செல்லகூடாது என கட்டளை இட்டனர்.


 மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கு போன் செய்து திருமணம் செய்ய அடியக்கமங்கலம் வந்தால் பிரச்னை செய்வோம் , மண்டை உடைக்கப்படும் என்று மிரட்டி உள்ளனர்.

 ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் மாப்பிள்ளை வீட்டார் மிரட்டலுக்கு அஞ்சாது அடியக்கமங்கலத்திலேயே நடத்த முன்வந்தனர். 

இந்நிலையில் 5-11-2012 அன்று  மர்க்கஸில் கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏகத்துவ சொந்தங்கள் என அனைவரும் குழுமினர். இவர்களுடன்  காவல்துறையும் வேனில் வந்து பாதுகாப்பு கொடுத்தது

 திருமணதிற்கு சற்று முன்பு நம் மர்க்கஸிற்க்கு வந்த RDO  மற்றும் தாசில்தார் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடித்திய பிறகு  திருமணத்தை நடத்திக்கொள்ளுமாறு கேட்டுகொண்டனர். 

இது மேலும் பிரச்சணைக்கு வழி வகுக்கும் என்று உணர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் உடனடியாக நபி வழி திருமணத்தை நடத்தினர்.

 திருமணம் நடந்த செய்தியை அறிந்த சுன்னத் ஜமாத்தினர்(?) பள்ளியில் பல முறை சங்கு ஊதி ஊரில் பதட்டத்தை ஏற்படுத்தினர்.  



(திருமணத்தின் போது காவல்துறையின் முழு பாதுகாப்பு)









 திருமணதிற்கு பிறகு இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த  காவல்துறை திட்டமிட்டு மாவட்ட நிர்வாகிகளை காத்திருக்க சொன்னார்கள். ஆனால் சுன்னத் ஜமாஅத்தினற்க்குள் வாக்குவாதம் வந்து அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஓயாததால் காவல்துறை  நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தற்போது பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று கூறி நமது நிர்வாகிகளை செல்லுமாறு கேட்டு கொண்டது. 

அல்லாஹ் சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் . அல்லாஹ அக்பர் !!!

இதன் பிறகு தங்களது எண்ணம் தோல்வியடந்த கோபத்தில் "வாடகை வீட்டில் வசிக்கும் நமது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் சிலரை 24 மணி நேரத்தில் காலி செய்யவேண்டும்" என்று வீட்டு உரிமையாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளனர். 



பெண்வீட்டார் உள்பட கிளை நிர்வகிகள் 8 பேர் ஊர நீக்கம் செய்ப்பட்டனர்...




(அனைத்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த TNTJ மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான்)


திருமணதிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் அப்துல்ரஹ்மான் "அடியக்கமங்கலத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது சமுகத்தில் உள்ள வரதட்சணை ,வட்டி மூடநம்பிக்கைகளுக்கு எதிரக எங்கள் ஜமாஅத் களம் கண்டு வருகிறது . லட்சகணக்கான வரதட்சனை இல்லா திருமணங்களை நடத்திவருகிறோம் இப்படிப்பட்ட திருமணங்களை சட்டத்திற்கு புறம்பாக தடுக்க முற்படுவோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் ஜனநாயக உரிமையைகாக நாங்கள் களத்தில் இறங்கி போராட நேரிடும்" என்று சூளுரைத்தார் .

எல்லா புகழும் இறைவனுக்கே...(அல்ஹம்துலில்லாஹ்...)







-TNTJ AYM செய்தி தொடர்பாளர்...

      
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(?), தகர்தெறிந்த TNTJ AYM... Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top