அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2013 அன்று மாலை
அடியக்கமங்கலத்தில் ஒரு தப்லிக் கூட்டம் வந்தது. அதில் 2 சகோதரர்கள் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்களும், 4 சகோதரர்கள் தமிழ் பேசக்கூடியவர்களாக எங்களை வந்து சந்தித்தனர்.
முதலில் இந்தோனேஷியாவை சேர்ந்த சகோதரர்கள் "அல்லாஹ் ஒருவனே அவனை மட்டும் தான் வணங்க வேண்டும் என்றும், வாழ்க்கை என்பது ஒரு சிறிய காலம் தான் அதற்க்குள் நாம் மறுமைக்கான வெற்றியை தேடிக்கொள்ள வேண்டும்" என்றும் ஆங்கிலத்தில் கூறினார்.
அதன் பின் நமது தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ் பேச தெரிந்தவர்களிடத்தில் அடியக்கமங்கலத்தில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் நீங்கள் தங்கி உள்ளீர்கள். அங்கு இன்று இரவு மவ்லீதுகள் ஒதூவார்கள் அது ஒரு இனைவைப்பு நீங்கள் அதை தடுத்து நிருத்தவேண்டும் என்று கூறினர்.
அதற்கு அவர்கள் மவ்லீது ஒரு இனைவைப்பா என்று கேட்டார்கள், அதன் பின் நம்து சகோதரகள் சில் மவ்லீத் வரிகளை கூறி அவர்களுக்கு தாவா செய்தனர். தப்லீக் ஜமாஅத்தில் உள்ள நீங்கள் நன்மையை ஏவினால் மட்டும் போதாது தீமையை தடுக்க வேண்டும் முடியாவிட்டால் விலகி கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
அதன் பின் இந்தோனேஷியாவை சேர்ந்த சகோதரர்களிடத்தில் அடியக்கமங்கலத்தில் இருக்க கூடிய சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் மவ்லீது, தர்கா வழிப்பாடு போன்று இனவைக்ககூடியவர்களாகவும், இனைவைக்கும் காரியங்களுக்கு துணை போக கூடியவர்களாகவும் இருக்கீறார்கள்.
நீங்கள் கண்டிப்பாக நிர்வாகிகள் இடத்தில் தாவா செய்ய வேண்டும் என்று நமது தவ்ஹீத் சகோதரர்கள் ஆங்கிலத்தில் கூறினார்கள். அதற்கு அவர்கள் இன்ஷா அல்லாஹ் கூறுவோம் என்று கூறினர் அல்ஹம்துலில்லஹ்...