FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, August 29, 2011

சுமையான கேள்விக்கு(?) சமையான பதில்(!) அடியற்க்கை சுமையாவில்...

Monday, August 29, 2011
9:39 PM
அடியக்கமங்கலம் சுமையா அறக்கட்டளையில் இரவு தொழுகையில் இமாம் அவர்கள் கையில் குர் ஆனை வைத்து பார்த்து ஒதுகின்றார்.இதை தவறு என்று நம் ஜமாஅத் சகோதரர்கள் பலமுறை எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.இதற்கு ஆதாரம் கேட்டாள் "அந்த இமாம் சொன்னார் இந்த இமாம் சொன்னார்" என்று சமாளிக்கின்றனர்.



ஆனால் இரவு தொழுகையின் போது அந்த பள்ளியின் பெண்கள் பகுதியில் இருந்து இந்த கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பேச்சாளர் அவர்கள் தாராளமாக ஓதாலாம் என்று கூறிவிட்டார்.

பெண்கள் மீண்டும் "அவ்வாறு ஓதினால் சுன்னத் விடபடுகின்றதே" என்று கூறியவுடன் பேச்சாளர் அவர்கள் சமாளிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறிய சமையான பதில்...

(1)இரண்டு கை இல்லாதவர்கள் சுன்னத்தை விட்டு விட்டு தான் தொழுகிறார்.


(2)நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சஹாபி பெண்கள் தங்களது குழந்தைகளை தூக்கி மடியில் வைத்து தான் தொழுதார்கள்.


(3நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்யும் போது ஒரு கையில் கடிவாளத்தை பிடித்து கொண்டு தொழுதுள்ளார்கள்.

என்று உலகில் யாரும் கூறிராத ஒரு பதிலை கொடுத்துள்ளார் .

 பெண்கள் கேட்ட கேள்வி என்ன என்பதை முற்றிலும் மறந்து தன்னுடை மடமையை வெளிபடுத்தி உள்ளார் இந்த பேச்சாளர் .

அவர் சொன்ன பதிலை சற்று சிந்தித்தால் அவர் சொன்னது தவறு என்பதை எளிதாக நாம் அறிந்து கொள்ளலாம்.

முதல் கேள்வி-கை இல்லாதவர் அவ்வாறு தான் தொழ முடியும் அவருக்கு கை இருந்தால் தான் அவருக்கு அது சுன்னத்தை விட்டதாக ஆகுமே தவிர கை இல்லாத காரணத்தால் அவருக்கு அதில் எந்த ஒரு தவறும் ஆகாது.

இராண்டாம் கேள்வி-சஹாபி பெண்கள் சிலர்  தங்களது குழந்தைகளை தூக்கி மடியில் வைத்து தொழுது உள்ளனர்.இது அவர்களுக்கு கொடுக்க பட்ட சலுகையாகும்.ஏன் என்றால் அவர்கள் வீட்டை சுத்தபடுத்த வேண்டும், கணவனை கவனிக்க வேண்டும்,தன் குழந்தையை கவனிக்க வேணடும் இந்த இக்கட்டான சூழ் நிலையில் தொழுவது அவர்களுக்கு மிக சிரமமானது.ஆகையால் நபி (ஸல்) இந்த செயலை தடுக்கவில்லை.

மூன்றாம் கேள்வி-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்யும் போது ஒரு கையில் கடிவாளத்தை பிடித்து கொண்டு தொழுதுள்ளார்கள் என்பது உண்மை தான்.

அவர்கள் பயணத்தில் உள்ளார்கள்.பயணத்தின் போது தொழுவது அந்த காலத்தில் மிகவும் சிரமமாக தான் இருந்தது.இந்த காலகட்டத்தில் வேண்டும் ஆனால் எளிதாக இருக்கலாம்.ஆனால் அன்றைய காலத்தில் உளூ செய்ய தண்ணிர் கிடைக்காது,தொழுவதற்க்கு இடம் கிடைக்காது.ஆகையால் அவர்கள்  ஒட்டகத்தின் மீது அமர்ந்த படியே தொழுதுள்ளார்கள்.தனது கடிவாளத்தை விட்டு விட்டால் ஒட்டகம் வழிதவறி போக நெறிடும்.

பயணத்தின் போது ஃபர்ள் 2 ரக்காயத்துகள் தொழுதால் போதும் என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ஆகையால் நாம் இதை ஆதாரமாக கொண்டு இனி ஃபர்ளை 2 ஆக தொழுதால் போதும் என்று சொல்ல முடியுமா.

இவர்கள் கூறிய பதில் சிறிதாவது நாம் கேட்ட கேள்விக்கு சம்மந்தம் இருக்கிறதா.

இங்கு தொழுகை வைக்க கூடிய இமாமுக்கு கை இல்லையா?


அல்லது குழந்தையை மடியில் வைத்து தொழுகிறாரா?


அல்லது ஒட்டகத்தின் மேல் அமர்ந்து தொழுகை நடத்துகிறாரா?

இதில் எதையும் அவர் செய்யவில்லை.அவர்கள் கூறிய மூன்று பதில்களுமே சூழ்நிலையை,நிர்பந்தத்தை தருகின்றது.

ஆனால் இவருக்கு எந்த ஒரு சூழ்நிலையும் ஏற்படவில்லை.இவ்வாறு தொழ கூடாது என்று நன்கு அறிந்தும் இவ்வாறு செய்து வருகின்றனர்.தெரிந்ததை ஓதி தொழுகையை முடிக்காமல் இது போல் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவறு என்று பேச்சாளருக்கு நன்றாகவே தெரியும் ஆனால் தவறு என்று கூறிவிட்டால் பயாண் பேசவிடமாட்டார்கள்,அடித்து துறத்திவிடுவார்கள் என்று அஞ்சி சமாளித்துள்ளார் இந்த மேய்பாளர்...

இவர்களின் உண்மையான கொள்கை சொத்தை சேர்த்து தங்களது பெயரில் வைத்து கொள்வது தான்.ஆனால் வெளியில் ஏகத்துவ வாதிகள் போல் காட்டி கொள்வார்கள்.நாங்கள் தான் தவ்ஹீத் என்று பெருமை அடிப்பார்கள்.

இவர்கள் போலி தவ்ஹீத்வாதிகள்...இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சுமையான கேள்விக்கு(?) சமையான பதில்(!) அடியற்க்கை சுமையாவில்... Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top