சகோதரர்கள் ஏகத்துவ பணி செய்துவருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன் நபிவழிப் படி திருமணம் செய்வதற்கு போலி சுன்னத் ஜமாத்தினர் கடும் எதிர்ப்புகாட்டினர் தடைகளை உடைத்து TNTJ வினர் திருமணத்தை நடத்தினர் இதில் கோபமடைந்த ஜமாத்தினர் நமது சகோதர்களை ஊர்நீக்கம் செய்தனர் இந்த ஆண்டு பித்ரா வசூல்கூட TNTJ வினருக்கு கொடுத்தால் உங்களுக்கு நல்லது கேட்டது உள்ளது பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி வசூல் செய்தனர் நமது பள்ளியில் நடத்தப்பட்ட திருமணத்திற்கே இப்படி என்றால் நபி வழிப்படி மையத் அடக்கம் என்றால் கேட்கவா வேண்டும்
இதையடுத்து நம்முடைய கிளை நிர்வாகிகள் சுன்னத்வல்{ ?}ஜமாத்தினரிடம் ஊர் பொது மையவாடியை திறக்க கோரி சுன்னத் ஜமாதின் தலைவராக இருக்ககூடிய பசுருதீனை நேரில் சென்று சந்தித்து நபி வழியில் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதிக்கேட்டதும் அடக்கம் செய்வதர்க்கு எந்த தடையும் இல்லை சம்மந்தப்பட்ட தெரு பிரதிநிதியிடம் கேட்டு அடக்கி கொள்ளுங்கள் என்று கூறிய உடன் சம்மந்தப்பட்ட தெரு பிரதிநிதியான திரிஸ்டார் சாதிக் அலியிடம் [இவர் tntj லிருந்து நீக்கப்பட்ட சுமையா டிரஸ்ட்ல் நிர்வாகியாக உள்ளார் ] நமது நிர்வாகிகள் செய்தியை சொன்ன உடன் அடக்கம் செய்வதர்க்கு எந்த தடையும் இல்லை எனது டிவிசனை(division) சார்ந்த ஜனாஷாவாக இருப்பதால் நீங்கள் தொழவைத்து விட்டு ஜனாஷாவை எங்களிடம் தந்துவிட வேண்டும்
நாங்கள் அடக்கம் செய்துக்கொள்வோம் என்று கூறினார், நீங்கள் அடக்கம் செய்யும் முறை முழுக்க முழுக்க நபிவழிக்கு புறம்பானது என்று கூறியதும் நானும் தவ்ஹித் வாதிதான் என்று கூறி விட்டு நாங்கள் அடக்கம் செய்தால் ஹஜ்ரத் பாத்தியா ஓதத்தான் செய்வார் என்று கூறி தனது தூய தௌஹீத்[?] கொள்கையை வெளிப்படுத்தினார் அதற்க்கு tntj வினர் நாங்கள் தான் தொழவைப்போம் நாங்களே அடக்கம் செய்வோம் என்று கூறிவிட்டு மீண்டும் சுன்னத் ஜமாத் தலைவரை சந்தித்து நடந்ததை கூறி பொது மையவாடியை திறந்து விடும் படி கூறினர் உடனே அந்தற் பல்டி அடித்து முதலில் அடக்கம் செய்ய தடையில்லை என்று கூறியவர் நீங்கள் யார் இந்த மையத்தை அடக்குவதற்கு சம்மந்தப்பட்டவரை (இறந்த குழந்தையின் தந்தை) எங்களிடம் வரசொல்லுங்கள் நாங்கள் அடக்கி கொள்கிறோம் நீங்கள் தலையிடாதீர்கள் என்று கூறினார்
பிறகு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைப்படி மாவட்ட நிர்வாகிகளுடன் கிளை நிர்வாகிகள் காவல் நிலையத்தில் பிரச்சனை இன்றி ஜனாஸாவை அடக்க உதவுமாறு மனுக்கொடுத்தனர் மற்றும் உளவுத்துறைக்கு பிரச்சனையின் வீரியத்தை எடுத்துக்கூறி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினர் அதன்பிறகு உடனே V.A.O , R.D.O, தாசில்தார் காவல்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்துவிட்டனர் மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளிடம் சட்டத்திற்கு புறம்பாக ஜமாத்தினர் இறந்த குழந்தையை அடக்கவிடாமல் தடுக்கின்றனர் தங்கள் உடனடியாக அடக்கம் செய்வதற்கு வழிவகை செய்யும்படி கேட்டுக்கொண்டனர் உடனே காவல்துறை அதிகாரிகள் சமந்தப்பட்ட சுன்னத்வல் ஜமாத் நிர்வாகிகளிடம் சென்று பேசினர் நள்ளிரவு 12மணி வரை எந்த முடிவும் எட்டவில்லை
இதற்கிடையில் மையவாடியை திறக்க கோரி சுன்னத் ஜமாத் அலுவலகத்திற்குசென்ற இறந்த குழந்தையின் தந்தையிடம் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் இது உங்கள் குழந்தைதான் என்று எப்படி நாங்கள் நம்புவது இந்த குழந்தையை நீங்களே சாகடித்து இருக்கலாம் யாருடைய குழந்தையோ உங்கள் குழந்தை என்று நீங்கள் தூக்கி வந்து இருக்கலாம் என்று கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் ஏற்கனவே குழந்தையை இழந்து கஷ்டத்தில் இருப்பவரிடம் மேலும் மன வேதனைக்கு உட்படுத்தினார் போலி சுன்னத் ஜமாத் தலைவர் பசுருதீன் நேரம் ஆக ஆக நமது கொள்கை சொந்தங்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர் நமது நிர்வாகிகள் அடக்கம் செய்வதற்கு உள்ள அனைத்து ஏற்ப்பாடுகளையும் செய்ய தொடங்கி எந்த வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்த நமது நிர்வாகிகளையும் வெளியூரில் இருந்து வந்திருந்த கொள்கை சொந்தங்களை பார்த்ததும் எதிரிகளின் எதிர்ப்பு வழு தளர ஆரம்பித்தது ஒரு பக்கம் குழந்தை ஜனாஸாவிற்கு கஃபனிடும் பனியும் மறுபக்கம் அடக்கம் செய்ய தேவையான கடப்பாறை, மம்பட்டி , பாய், கட்டையுடன் நம்முடைய சகோதரர்கள் தயாரானதை காவல்துரைனர் கவனித்துகொண்டுடிருந்தனர்
அடியக்கமங்கலத்தில் இஸ்லாமிய சட்டதிற்கு எதிராக இருந்த 300 வருட பாரம்பரியமிக்க போலி கட்டுபாடு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உடைத்து தகர்த்தெரியப்பட்டது . எந்த ஒரு ஆர்பரிப்பும் ஆரவாரமுஇன்றி தவ்ஹீத் வாதிகள் அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக கலைந்து சென்றனர்...