இணையில்லா இறைவனின் கிருபையால் 10-05-2015 அன்று
ரயிலடித்தெரு (TNTJ ) தவ்ஹீத் மர்கஸில் அடியக்கமங்கலம் கிளை 2 மற்றும் மாவட்ட மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்
கிளை 1&2 நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு கிளை-2 தலைவர் அப்துல் காதிர் அவர்கள் தலைமை தாங்கினார்.
அதன் பின் மாவட்ட பேச்சாளர் & கிளை-1 இமாம் s. பகுருதீன் அவர்கள் "மனித நேய மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் இஸ்லாம் போதிக்கும் மனித நேய கருத்துக்களையும், இஸ்லாம் அனுவளவு கூட பயங்கரவாதத்தையும்,தீவிர வாதத்தையும் ஆதரிக்க வில்லை என்று சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
இந்த முகாமிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக...
1. S.M.J நிஜாமுதீன் (AYM ஊராட்சி மன்ற & ஜமாஅத்)
2. S. சங்கர் (AYM ஒன்றிய குழு உருப்பினர் ), ஆண்டிபாலையம்
3. தங்க துரை (AYM ஊராட்சி மன்ற துனை தலைவர் )
4. P. ராஜிவ் காந்தி (AYM வார்டு உருப்பினர்)
5. V.செல்வம் (AYM தாமரைக்குளம்)
6. R.பழனி வேல் (ஊராட்சி மன்ற தலைவர்) சேமங்கலம்
7. R.D முத்து (AYM ஒன்றிய கவுன்சிலர்)
8. R. ராமதாஸ் (கிராமத் தலைவர்) தாமரைக்குளம்
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாற்று மத நண்பர்கள், பெண்கள் உட்பட 24 நபர்கள் தங்களின் குருதிகளை வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ்...
கோடை வெப்பத்தின் தாக்கத்தினாலும்,நேரமின்மை காரணத்தினாலும் மதியம் 1.30 மனிக்கெல்லாம் மருத்துவ கல்லூரி ஊளியர்கள் தங்களது உபகரணங்களை எடுத்து வைக்க ஆரம்பித்த காரணத்தினால் 6 நபர்களால் இரத்ததானம் செய்ய இயலாமல் போய் விட்டது...
மார்க்க பணியிலும் & சமுதாய பணியிலும் அடியக்கமங்கலம் TNTJ கிளை 1&2 தொடர்ந்து சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போம்..
. இவண்,
TNTJ AYM Webmaster,
www.tntjaym.com