மழை வேண்டி தொழுகை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-05-2019 அன்று காலை 6 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடுத்தெரு தாமரைக்கேணி முகப்பில் மழை வேண்டி தொழுகை நடைப்பெற்றது.
நோன்பு காலமாக இருந்தும் தொழுகையின் நன்மையையும், முக்கியத்துவத்தையும் அறிந்த பெண்கள் காலை 5.30 மணிக்கே தொழுகை இடத்திற்கு வருகை தந்ததை பார்க்கும் போது அவர்களுக்கு மார்க்கத்தின் மீது உள்ள ஆர்வத்தை புரியமுடிந்தது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.
மேலும், சஹர் பாங்கு, மழைத்தொழுகை , ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதில் எப்போதும் TNTJ முதன்மையாக இருக்கிறது.
இந்த அமைப்பில் எங்களை அங்கம் வகிகக்க செய்த அல்லாஹ்விற்க்கே புகழனைத்தும்.
அல்லாஹ் ரப்பூல் ஆலமின் இத்தொழுகையை ஏற்று அருள் மழைய பொழியசெய்வனாக... இன்ஷா அல்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ
அடியக்கமங்கலம் கிளைகள்