FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 1, 2010

கொமொடொ (Comodo): சூப்பரான இலவச ஆன்டி வைரஸ் (Anit Virus) மென்பொருள்

Monday, November 1, 2010
3:22 PM


கம்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு பெரும் பிரச்சானையாக இருப்பது இந்த வைரஸ் தொல்லை தான். இதனால் எதிர்பாராமல் நமது முக்கிய மான வேலைகள் பாதிக்கப்பட்டு விடும். சில நேரங்களில் இதை சரி செய்ய மணிக்கணக்கில் போராட வேண்டியிருக்கும்.


இணையதள பயன்பாடு உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இதை சமாளித்து சரி செய்வதற்குதான் ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருட்கள் உள்ளன.


பெரும்பாலான ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருள் இலவசமாக கிடைப்பதில்லை அவ்வாறு இலவசமாக கிடைக்கும் அவேரா (avera) ,ஏவிஜி (AVG) , மைக்ரோசாஃப்ட் டிஃபன்டர் (Windows Defender) , மைக்ரோ சாஃப்ட் செகுரிட்டி (Microsoft Security Essentials ) , பாண்டா க்ளவுட் (Panda Cloud )போன்ற ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் விலைக்கு வாங்கும் ஆன்டிவைரஸ் மென்பொருள் போன்று செயல்படுவதில்லை!


தற்பொது கொமொடொ (Comodo) என்ற நிறுவனம் இலவசமாக அன்டிவைரஸ் மென்பொருளை வெளியிட்டுள்ளது. நாம் பரிசோதித்ததில் இது விலை கொடுத்து வாங்கும் மென்பொருளை விட சிறந்த முறையில் வேலை செய்கின்றது. மேலும் Defense+ போன்ற இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.


இந்த ஆன்டி வைரஸ் மென்பொருடன் ஃயர்வாலும் (Firewall) இலவசமாக கிடைக்கின்றது. இது இன்டர்நெட் மூலம் நமது தகவல்கள் திருடப்படாமல் பாதுக்காக்கவும் இணைதயளம் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் நமது கணிணியை பாதுகாத்துக் கொள்ளும்.


இப்போதே பதிவிறக்கும் செய்து உங்கள் கணிணியை வைரஸ்களிடமிருந்து காத்துக் கொண்டு நிம்மதியாக பணியாற்றுங்கள்!.

download comodo

பதிவிறக்கம் செய்து நிறுவிய பிறகு வைரஸ் ஸ்கேனரை படத்தில் உள்ளது போன்று On Access மோடிற்கு மாற்றிக் கொள்ளவும். அப்பொழுதான் மென்பொருள் சிறப்பாக செயல்படும்!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கொமொடொ (Comodo): சூப்பரான இலவச ஆன்டி வைரஸ் (Anit Virus) மென்பொருள் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top