பணத்தை மக்களிடம் திரட்டி உரிய ஏழைகளிடம் நேரில் சென்று விநியோகிப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் தற்போதைய சுன்னத் ஜமாஅத் நிர்வாகத்தினர் TNTJ AYM நிர்வாகிகளுக்கு எந்த வித அழைப்பும் கொடுக்காமல் அவர்களாக மஹாஜன சபையை கூட்டி ஃபித்ரா ஒரு நபருக்கு ரூபாய் 50 என்ற கணக்கில் பொதுமக்களிடம் வசூல் செய்து விநியோகிப்பது என்று முடிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி அடியக்கமங்கலத்தில் ஃபித்ரா பணத்தை சுன்னத் ஜமாஅத் நிர்வாகம் அல்லாது வேறு யாரும் வசூலிப்பதோ, விநியோகிப்பதோ கூடாது என்று துண்டுபிரசுரம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
எல்லா வருடமும் போல் இந்த வருடமும் TNTJ AYM கிளை சார்பாக ஒரு நபருக்கு ரூபாய் 80 என்ற கணக்கில் பொது மக்களிடம் வசூல் செய்து அதை முறையாக ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்படும் என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டது...
இதை அறிந்த போலி சுன்னத் ஜமாஅத் நிர்வாகத்தினர் TNTJ கிளை நிர்வாகிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஃபித்ரா சம்பந்தமாக உங்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். மாவட்டத்தின் ஆலோசனைப்படி எழுத்துபூர்வமாக அழைப்பு கொடுத்தால் நாங்கள் வருவோம் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து சுன்னத் ஜமாஅத் சார்பாக எழுத்து பூர்வமான அழைப்பு கடிதம் நம்மை வந்து சேர்ந்தது. அழைப்பை ஏற்று நமது TNTJ AYM நிர்வாகிகள் அவர்களை சந்தித்தனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் " எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஃபித்ரா பணத்தை திரட்டி ஊர் சுன்னத் ஜமாஅத் சார்பாக ஏழைகளுக்கு விநியோகிக்கலாம் என்று மஹாஜன சபை முடிவு எடுத்தும் துண்டுபிரசுரம் விநியோகித்தும் ஊரை மீறி நீங்கள் ஃபித்ராவை வசூல் செய்வதாக அறிவித்துள்ளீர்களே" என்று கேட்டனர்.
அதற்கு நமது நிர்வாகிகள் " பல வருடங்களாக TNTJ AYM செய்து வரும் இந்த அருட்பணியை எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் தான்தோன்றி தனமாக நீங்களாக முடிவு எடுத்துள்ளீர்கள். அதுமட்டுமல்லாமல் சர்வாதிகார தனமாக யாரும் ஃபித்ரா வசூலிப்பதோ, விநியோகிப்பதோ கூடாது என்று துண்டுபிரசுரம் விநியோகித்துள்ளீர்கள்.
மேலும் நபி வழிக்கு மாற்றமாக ஒரு நபருக்கு ரூபாய் 50 என தீர்மானித்துள்ளீர்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறைப்படி நாம் எந்த உணவை உண்ணுகிறோமோ, அந்த உணவிலிருந்து ஒரு ஸாவு ( 2 அறை கிலோ) அளவை ஏழைகளுக்கு வழங்குமாறு கூறியுள்ளார்கள். பெரும்பாலும் நமது வீடுகளில் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலையுள்ள அரிசியை தான் உணவாக உண்ணுகிறோம். அந்த அடிப்படையில் ஒரு நபருக்கு ஃபித்ரா ரூபாய் 80 தான் நபி வழிப்படி சரியானதாக உள்ளது" என்று நமது நிர்வாகிகள் கூறினார்கள்.
அதற்கவர்கள் " நாங்கள் உங்களுக்கு அழைப்பு கொடுக்காதது தவறு தான். மஹாஜனசபையில் ஃபித்ரா விலை சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது. அதை இனிமேல் மாற்ற முடியாது " என்று அலட்சியமாக கூறினர்.
அதற்கு நமது நிர்வாகிகள் " TNTJ என்பது ஒரு தனி ஜமாஅத் அது உலகம் முழுவதும் கிளைகளை வைத்து செம்மையாக செயல்பட்டு வருகிறது. நபி வழிக்கு மாற்றமான இந்த ஃபித்ரா தீர்மானத்தை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் ஊர் தீர்மானத்தை மீறி நாங்கள் நபிவழிப்படி ஃபித்ராவை வசூல் செய்து அந்த பணத்தை உரிய ஏழைகளுக்கு கொண்டு சேர்போம் " என்று பகிரங்கமாக கூறப்பட்டது.
அவர்களிடத்தில் கூறியது போலவே அடியக்கமங்கலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நபிவழி ஃபித்ராவை விளக்கி வசூல் செய்யப்பட்டது. இதை அறிந்த போலி சுன்னத் ஜமாஅத் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று வழுக்கட்டாயமாக ஃபித்ரா பணத்தை வசூலித்துள்ளனர்.
எந்த வித கட்டாயமும் இல்லாத இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறு கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளது இவர்களின் கோழைத்தனத்தை படம்பிடித்து காட்டுகிறது.
அடியக்கமங்கலத்தில் நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் நபிவழிதான் எங்கள் வழி என்றும் கூறிவரும் சுமையா அறக்கட்டளை கூட நபிவழியை மறந்து அவர்களுக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டால் ஊருடன் ஒத்து வாழ வேண்டும் என்று நபி வழியை வளைத்து கொடுக்கின்றனர்.
இப்படி அனைத்து இயக்கங்களும் ஊர் ஜமாஅத்தும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வசூலித்த தொகை வெறும் 1,85000 தான். ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ AYM சார்பாக அடியக்கமங்கலத்தில் மட்டும் வசூலித்த தொகை ரூபாய் 35,765. இவர்களின் இந்த தீர்மானத்தை மக்களே ஆதரிக்கவில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது.
நபி வழிக்கு மாற்றமாக எந்த செயல்களிலும் சமரசம் செய்யாத இந்த TNTJ ஏகத்துவ சத்திய கொள்கை வளர அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்...
( ஃபித்ரா தொடர்பான செய்திகள் பித்ரா 2012 என்ற தலைப்பில் பார்க்கவும் ... )