அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருடா வருடம் ரமாலான் மாதம்
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு கிளை சார்பாக ஏழை மக்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அது போல் இந்த வருடமும் 08-08-2013 அன்று இரவு சித்தாநல்லூர், அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம், மருதப்பட்டனம், கிடாரங்க்கொண்டான், கல்லிக்குடி போன்ற இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அவர்களது இல்லங்களை தேடி நேரில் சென்று (ரூபாய் 212 மதிப்புள்ள உணவு பொருட்களூம் + பணமாக ரூபாய் 100) 250 ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
அடியக்கமங்கலம் போலி சுன்னத் ஜமாஅத்தார்களால் மக்கள் மத்தியில் அவர்களுக்கே உரிய பாணியில் " நல்லது,கெட்டதை நாங்கள் தான் செய்ய வேண்டும், திருமணம் என்றாலும், மைய்யத்து என்றாலும் எங்களை தான் நீங்கள் நாடி வரவேண்டும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத்தார்களூக்கு நீங்கள் ஃபித்ரா பணத்தை கொடுக்க கூடாது என்று மிரட்டியும், கட்டாயபடுத்தியும் ஃபித்ரா தொகையை பிச்சைகாரர்களை விட கேவலமாக பிடுங்கி சென்றுள்ளனர்.
சுன்னத் ஜமாஅத் என்று பெயரை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க நபிவழிக்கு மாற்றமாக ஜமாஅத்தை நடத்திவரும் இந்த கயவர்கள் ஃபித்ரா தொகையிலும் இவர்களது கையாலாகாத தனத்தை காட்டியுள்ளனர்.
நபி வழியில் திருமனம் செய்யப்பட்டதுக்காக 8 குடும்பங்களை ஊர் நீக்கம் செய்யப்பட்டு, தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிக்கு சென்று தொழுதால் உங்களையும் ஊர் நீக்கம் செய்வோம் என்று பொது மக்களுக்கு மத்தியில் மிரட்டிய சுன்னத் ஜமாஅத் ரவுடிகளை தமிழ்நாடு சட்டம் மூலம் இவர்களது ஊர் நீக்கிய சட்டத்தை உடைத்து அவர்களை வெக்கி தலையைகுனிய வைத்தது தவ்ஹீத் ஜமாஅத்.
இப்படி இருந்த போதும் அரசு அதிகாரிகள் மத்தியில் ஊர் நீக்க வில்லை என்று கூறிவிட்டு அப்பாவி பொது மக்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தார்களை ஊர் நீக்கிவிட்டோம் அவர்களுக்கு ஃபித்ரா தொகையை கொடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் இவர்களுது நயவஞ்சகதனத்தை அடையாளம் கண்டுக் கொண்டு எவ்வித அச்சமும் இல்லாமல் ஃபித்ரா தொகையை நேரிலும், தொலைப்பேசி மூலம் தொடர்புக்கொண்டு வாரீ வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்....
எந்த வருடமும் இல்லாமல இந்த வருடம் ரூபாய் 37,650 உள்ளூரில் வசூலிக்கப்பட்டது (அல்லாஹ் அக்பர் ). இதன் மூலம் இவர்களுது ஊர் நீக்கிய சட்டம் மக்களால் கூட மதிக்கப்படவில்லை என்பது நமக்கு ஊர்சினமாயிற்று.
இவர்கள் இப்படியே கையலாகாத தனமாக ஊர் ஜமாஅத்தை தொடர்வார்களானால் அனைத்து பொதுமக்களும் போலி சுன்னத் ஜமாஅத்தை அடையாளாம் கண்டுக்கொண்டு அதை விட்டு விலகி தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்துவிடுவார்கள். அந்த நாள் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ்...
நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறிக்கொண்டும், அடியக்கமங்கலம் தவ்ஹீத் ஜமாஅத் ( ATJ ) என்று பள்ளிக்கு பெயரை வைத்துக் கொண்டும், வாய்கூசாமல் நபி வழி பின்பற்றுகீறோம் என்றும் மக்களூக்கு மத்தியில் உலா வரும் இந்த சுமையா திருடர்களும் இநத நபிவழிக்கு புரம்பான விஷயத்தில்
ஒத்துவுதி சில அல்லகைகலை உதவிக்கு அனுப்பி வைத்தது வேதனையிலும் வேதனை. இவர்கள் தவ்ஹீத் என்று பெயரை வைத்துக்கொண்டு மக்களிடம் பணவேட்டையில் தான் இருக்கிறார்கள் தவிர நபிவழி எங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இவர்கள் யார் ? இவர்களின் கொள்கை என்ன?? இவர்கள் அடியற்கையில் சாதித்தது என்ன??? என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விரைவில் நிருபிக்கும்.
( குறிப்பு: ஃபித்ரா சம்பந்தமாக முழு வரவு, செலவு விபரம் விரைவில் வெளியிடப்படும். )