அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 09-01-16 அன்று மாலை 6.30 மனியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக தெருமுனைக்கூட்டம் & கேள்வி பதில் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடுத்தெருவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிளை-II தலைவர் N. அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
அதன்பின் கிளை-I இமாம் S.பகுருதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன்பின் சகோதரர் A. முஹம்மது பைசல் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பில் " TNTJ செய்து வரும் மார்க்க மற்றும் சமுதாய அரும்பனியினை எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து மௌலவி K.தாவுது கைசர் அவர்கள் "வஹீ அல்லாதது வழிகேடே" என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாம் அதனை தவிற்த்து வரக்கூடிய அனைத்திற்க்கும் இஸ்லாத்திற்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்..
இருதியாக கிளை-I செயளாலர் V.இபுராஹீம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்..
நிகழ்ச்சியின் இருதியாக கிளை-II ன் இக்ரா தவ்ஹீத் நூலகத்தின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டினை முன்னிட்டு வைக்கப்பட்ட கேள்வி பதில் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன..
அதன் விபரம் :
முதல் பரிசு 3,000 ரூபாய் பதிப்புள்ள STANDING FAN
இரண்டாம் பரிசு 2,500 மதிப்புள்ள INDECTION அடுப்பு
மூன்றாம் பரிசு 2,000 மதிப்புள்ள GAS STOW
நான்காம் பரிசு 1,500 மதிப்புள்ள SEELING FAN
ஆறுதல் பரிசு 40 நபர்களுக்கு 130 மதிப்புள்ள WALL CLOCK வழங்கப்பட்டது..!
அதனைத்தொடர்ந்து கிளை-I ன் சார்பாக மக்தப் மதரஸா மானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக எதிர் வரக்கூடிய ஜனவரி 31 திருச்சியில் இனைவைப்பிற்க்கு எதிராக மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இனைவைப்பின் வேராக திகளும் தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லை என்பதை எளிய முறையில் மக்களுக்கு உணர்த்தும் வகையில்
செயற்கையாக சமாதியை போல் அமைத்து குர்ஆன் ஹதீஸுடன் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்து மேடைக்கு அருகில் வைக்கப்பட்டது..
அதனுடைய புகைப்படம் கீழே