அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இம்மடல் தங்களை தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் சுகத்துடனும் சந்திக்கட்டுமாக.
நமதூர் ராஜா தெருவில் மஸ்ஜித் அக்ஸா என்ற பெயரில் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.
அந்தப் பள்ளிவாசல் பொருளாதார பற்றாக்குறையினால் கடந்த 3 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடப் பணி நடந்து வருகிறது.
இப்போது வெளி பூச்சும், தட்டு ஒடு போடுதல், மாடிப் படிக்கும் மிம்பர் படிக்கும் துரு பிடிக்காத SS கம்பி கிரில் வைத்தல், இன்னும் முழுமையாக பையிண்ட் அடித்தல் ஆகிய வேலைகள் செய்யப்படாமல் பாசிப்படிந்து கிடக்கிறது.
தட்டு ஓடு போடப்படாமல் மிகவும் பள்ளி தண்ணீர் உள் வாங்கி இருக்கிறது.
இந்த நிலையில் பள்ளிவாசலை முழு வேலையையும் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனவே உங்களால் முடிந்த நன்கொடையை வழங்கி அல்லாஹ்விடம் நன்மையை அடைந்து கொள்ளவும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான். நூல்:புஹாரி(450)
நான் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு வேலை யை உங்களுடைய பொறுப்பில் செய்து கொடுங்கள் அல்லாஹ்வுடைய இல்லத்திற்காக.....
மாடியில் ஜன்னல்களுக்கு கதவு போடாமல் மாடிப்படிக்கு கிரீல் இல்லாமல் இருப்பதால் மிகவும் குப்பையும் தூசியுமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக பிள்ளைகள் மத்ரஸா விற்கு வருவதற்கும், பெண்கள் ஜும்ஆ, இன்ன பிற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கும் பயப்படுகிறார்கள்.
ரமலான் வருவதாலும் வேலைகளை நிறைவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்.
ஆகவே தாமதிக்காமல் உடனே உங்கள் பங்களிப்பை பதிவு செய்யுங்கள்.
அல்லாஹ் நம் எண்ணங்களுக்கேற்ப கூலி வழங்க போதுமானவன்