FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, October 28, 2017

இஸ்லாமிய விளிப்புணர்வு பொதுக்கூட்டம் : (15/10/2017)

Saturday, October 28, 2017
11:35 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு பழைய EB முன்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கிளைகள் சார்பாக 15-10-2017 அன்று மாலை 6.10
மணிக்கு இஸ்லாமிய விழிப்புனர்வு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

 
 

அதனுடய பொதுக்கூட்ட துளிகள் பின்வருமாறு:
1)பொதுக்கூட்டத்திற்க்கு மக்களை அழைப்பதற்காக அக்டோபர் 13,14,15 தேதிகளில் ஆட்டோ மூலம் அலோன்ஸ் செய்யப்பட்டது.
2) ஊர் முழுவதும் வீடுவிடாக நோட்டீஸ்களும் & முக்கிய இடங்களில் போஸ்ட்டர்களும் ஒட்டப்பட்டது.
3) பழைய EB முன்பு செட்டித்தெரு பேருந்து நிலையத்தை நோக்கி மேடை அமைக்கப்பட்டது.
4) பயானை மக்கள் எளிதாக கேட்பதற்க்காக கீழ்கானும் இடங்கள் வரை ஒலிபெருக்கி அமைக்கப்பட்டது.


#மேற்கு - மேலச்செட்டித்தெரு அபூதாகீர் வீடு வரையிலும்
#கிழக்கு - ராஜாத்தெரு அல்காதிரியா ஸ்கூல் வரையிலும்,
#வடக்கு - IOB வங்கி வரையிலும்
5) பொதுக்கூட்ட இடத்தில் ஹாலோஜன் லைட்கள் கட்டப்பட்டன
6) பொதுக்கூட்ட சுற்றுவட்டார தெருகளில் நெடுகிழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொடிகள் மற்றும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன.
7) பொதுக்கூட்ட இடங்களில் சாலைகளை சுத்தம் செய்து குளோரின் பவ்டர் அடிக்கப்பட்டது.
8) கூட்டத்தின் காரணத்தால் மக்கள் மேடையை பார்க்க முடியாமல் போகும் நிலைய தவிர்க்க 2 டிவிகள் வைக்கப்பட்டது.
9) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முகநூல் பக்கங்களில் இப்பொதுக்கூட்டம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது
10) இஷா தொழுகையை நிறைவேற்ற ஆண்களுக்கு பள்ளியிலும் & பெண்களுக்கு அருகாமையில் உள்ள 4 வீடுகளிலும் தொழுகைக்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டது.
11) இப்பொதுக்கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட செயளாலர் அணஸ்
நபில் அவர்கள் தலைமை தாங்கி ஏகத்துவ பிரச்சாரத்தால் சமுதாயத்தில்
ஏற்பட்ட மாற்றங்கள் சம்பந்தமாக துவக்க உரையாற்றினார்.
12) அதன் பிறகு உரையாற்றிய மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் MISC அவர்கள்
"அரணாக வந்த அல்குர்ஆனும், முரணாக சென்ற முஸ்லிம்களும் " என்ற
தலைப்பில் மனித வாழ்கையில் அரணாக திகழ்ந்து முற்க்காலத்திற்க்கும்
பொருந்தக்கூடிய அல்குர்ஆனை மறந்துவிட்டு உலக வாழ்கையில் மூழ்கி அல்குர்
ஆனுக்கு முரணாக செய்லபடக்கூடிய நம் சமுதாய மக்களின் செயல்களை
சுட்டிகாட்டி குர்ஆனை அதிகம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


13) அதன் பிறகு இஷா தொழுகைக்காக 15 நிமிடம் இடைவேளி விடப்பட்டது.
14) அதனை தொடர்ந்து 7:52 மணிக்கு இரண்டாவது அமர்வு நடைப்பெற்றது.
14) இதில் உரையாற்றிய மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி அவர்கள் " குல் ஹூ வல்லாஹூ அஹது" என்ற தலைப்பில் அடியக்கமங்கலத்தில் தர்காகளின்
பெயரால் நடைப்பெறக்கூடிய கூத்து, கும்மாலங்களை கண்டித்தும், தர்காகள்
அனைத்தும் நபிகளார் காட்டிய அடிப்படையில் இடிக்கபட வேண்டியவை
என்றும், வணங்க தகுதியானவன் "அல்லாஹ் ஒருவனே"என்பதை ஆனித்தரமாக
அவருக்கே உரிய பாணியில் கர்ஜித்தார்.
15) அதனைத்தொடர்ந்து மாவட்ட இரத்ததான பொருப்பாளர் சலீம் அவர்கள் பொதுக்கூட்ட தீர்மாணங்களை வாசித்தார்


16) அடியக்கமங்கலம் கிளை 2 மக்தப் மதரஸாவின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது இதை மாவட்ட பேச்சாளர் பைசல் [கிளை 1 மஸ்ஜிதுல் அக்ஸா இமாம்) அவர்கள் தொகுத்து வழங்கினார்.
17) நிகழ்ச்சியின் இறுதியாக கிளை 2 தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் நன்றியுரையாற்றினார்.
18) தமிழன் தொலைக்காட்சி மற்றும் இதர பத்திரிகையாளர்கள் ஒளிப்பதிவு செய்தனர்.
19) கலந்துக்கொண்ட அனைவருக்கும் அவர்கள் சிரமத்தை குறைக்க உணவு ஏற்பாடு ஜமாஅத் சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டது.
20)அடியக்கமங்கத்தில் சத்தியத்தை நிலைநாட்ட இது போன்ற பொதுக்கூட்டங்கள் மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என நிர்வாகம் சார்பாக முடிவெடுக்கபட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....

இவண்,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
அடியக்கமங்கலம் கிளைகள்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய விளிப்புணர்வு பொதுக்கூட்டம் : (15/10/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top