அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக கடந்த நாட்களில் 12,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு சித்தாநல்லூர் , மேலத்தெரு , ஆண்டிப்பாளையம் ,அடியக்கமங்கலம் என கிராமம் கிராமமாக சென்று நீலவேம்பு கசாயம் வழங்கி அடியக்கமங்கலத்தில் சாதனை படைத்தது.
இதனை கண்ட முன்னாள் சேமங்கலம் ஊராட்சி தலைவர் (Ex)அன்பு அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவையை தானாக முன்வந்து பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக மக்கள் நல...ன் கருதி மீண்டும் களத்தில் இறங்கியது தவ்ஹீத் ஜமாஅத் .
ஆம் இன்று காலை 19 -10 -2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை 1 சார்பில் மேலச்செட்டித் தெருவில் 650 மக்களுக்கும் , கிளை 2 சார்பாக தெற்கு தெருவில் 750 மக்களுக்கு (மொத்தம் 1400) இன்று விநியோகிக்கப்பட்டது. ...