FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 23, 2011

மக்களே உஷார்

Tuesday, August 23, 2011
12:39 PM

ரமலான் மாதம் வந்துவிட்டால் ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் மிஸ்கீன் என்ற பெயரில் வலம் வருகின்றனர்.உண்மையில் இவர்கள் யார்? இவர்களை ஏழைகள் என்று வைத்துக்கொண்டாலும் இவர்கள் அனைவரும் முஸ்லிம்களா! என்று பார்த்தால் இல்லை.இதில் வரக்கூடிய கால்வாசி பேர்தான் முஸ்லிம்களாக இருக்கின்றனர்.மற்றவர்கள் எல்லாம் முஸ்லீம்களை போல வேஷம் போட்டுக் கொண்டு நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.இவர்கள் உடுத்த உடையில்லை என்றும் உண்ண உணவில்லை என்றும் நம் மக்களிடம் கூறி உடையையும்,உணவையும் வாங்கிச் செல்கின்றனர்.இதே போல் இன்னொரு வீட்டிற்கும் சென்று இதையே கூறுகின்றனர்.அதை விட சிறந்த உணவோ,சிறந்த ஆடையோ கிடைத்தால் முன்னர் வாங்கிய ஆடையை வீதியில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதோ ராஜாத் தெருவில் பொது இடத்தில் குப்பை போல் கிடக்கும் உங்கள் தர்மம்.

நாம் சொல்வது என்னவென்றால் இவர்களுக்கு காசாக கொடுத்துவிட்டால் கூட அதை வாங்கி சென்று செலவி செய்கின்றனர்.ஆனால் நமது ஆடைகளை இவர்களுக்கு கொடுத்து வீணடிக்க வேண்டாம்.இந்த ஆடைக்கூட இல்லாமல் எத்தனையோ ஏழைகள் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களை தேடிச் சென்று கொடுத்து உங்களின் தர்மங்களை பயனுள்ளதாக அமைத்து கொள்ளவும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன.

அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார்.

அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்!

மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள்.


நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல் குர்ஆன்-2:73

இவ்வாறு உள்ளவர்களுக்கு தர்மங்கள் உரித்தானதாகும்.ஆனால் நாமோ தவறான மக்களிடம் தர்மங்களை வழங்கி ஏமாந்துக் கொண்டிருக்கிறோம்.இனியாவது திருமறையின் வழிகாட்டுதல்படி உரியவர்களிடம் தர்மங்களை ஒப்படைத்து மறுமையில் வெற்றிப் பெறுவோமாக!!!


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மக்களே உஷார் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top