அலைக்கடலென திரண்டு திருச்சியை நோக்கி ஆர்பரித்த அடியற்கை மக்கள்...
அல்லாஹ்வின் உதவியால் 28-01-2014 அன்று திருச்சியில் நடைப்பெற்ற சிறை
செல்லும் போரட்டத்திற்கு அடியக்கமங்கலம் 1 & 2 கிளைகள் சார்பாக வாகன
வசதி செய்யப்பட்டது. 3 பேருந்துகளும் 2 கார்களும் மக்கள் வெள்ளத்தால்
நிறைந்த படி இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக சிறையை நோக்கி சீறி பாய்ந்தனர்.
போர்க்குணம் கொண்ட முஸ்லிம்களாக சிறுவர்களும், ஆண்களும். பெண்களும்,
முதியவர்களும் போராட்ட களத்தில் போர் முழக்கங்களாக அரசாங்க செவிட்டு
காதுகளுக்கு எட்டும் வகையில் கண்டன கோஷங்களை இடி முழங்களாக பதியவைத்தனர்.
அல்ஹம்துலில்லஹ்...
சகோதரர்கள் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் நேரத்தில் எங்கள் அமைப்பின்
மீதுள்ள காழ்புணர்ச்சியால் சமுதாய அக்கறையை மறந்து இந்த போரட்டத்திற்கு
எதிராக பலர் கலம் கண்டனர்.
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு மக்களை கலந்து கொள்ள வேண்டாம் என்று
நச்சு கருத்துகளை வீடுவீடாகவும், துண்டு பிரசுரங்கள் மூலியமாகவும்
பதியவைத்தனர். இவர்களுடைய கொள்கையை பார்த்தால்
அற்பத்திலும் அற்பமான பள்ளிவாசல் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு ஏகத்துவ
கொள்கையை மறந்த மோசடி கூட்டம் ஒரு பக்கம்...
மறுபக்கமோ அரசியல் சொகுசு வாழ்க்கையை விரும்பி ஒன்னு இரண்டு
சீட்டுகளுக்காக முஸ்லிம் சமுதாயத்தை அடகு வைத்த கொள்கை இல்லா கூட்டம்...
ஆனால் இறக்கமுள்ள அல்லாஹ்வின் உதவியால் அலைக்கடலென திரண்ட அடியற்கை மக்கள் திருச்சி போராட்டத்தில் ஆர்பரித்தனர்..
அநியாயகாரர்களை வெக்கி தலைகுனிய வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
அடியற்கை 1 & 2 கிளைகள் சார்பாக வாகனத்தில் அழைத்து சென்ற மக்களுக்கு
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரயான நேரத்தில் வீண் பேச்சுகளை தவிர்க்கும் நோக்கில் பயான் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அடியற்கை மக்கள் பெரும் கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருப்பதற்காக அனைவருக்கும்
அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு வருகை தந்த, பொருளாதார உதவி செய்த , ஆதரவளித்த, ஓயாமல் உழைத்த, தூஆ செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் முழுமையான நன்மைகளை வழங்குவானாக...அல்லாஹ் அக்பர்... எல்லாப் புகலும் அல்லாஹ்வுக்கே...