அல்லாஹ்வின் அளவற்ற அருளால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 19-03-2017 இன்று மாலை 4 மணியளவில் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் அல் ஹிதாயா அரபி பாட சாலையின் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வாக மாணவச்செல்வங்கள் பங்குகொண்ட தூஆ ஒப்பித்தல், சூரா ஒப்பித்தல் மற்றும் மார்க்க உரையாடல் நடைப்பெற்றது. மேலும் மதரசா போட்டியில் கலந்துக்கொண்ட *55 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்* வழங்கப்பட்டன.
இரண்டாவது அமர்வில் மாவட்ட செயலாளர் அனஸ் நபில் அவர்கள் *மார்க்க கல்வியின் அவசியம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நன்றியுரையாக கிளை 1 செயலாளர் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ....
: TNTJ கிளை 1 அடியக்கமங்கலம்